29 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

பேங்க் நெகாராவின் அனைத்துலகக் கையிருப்பு 11,580 கோடி டாலர்

🔥 Views : 6
👁 Reading Now : 48

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வரையிலான பேங்க் நெகாராவின் அனைத்துலக கையிருப்பு 11,580 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.

கடந்த மாத இறுதியில் இந்த தொகை 11,610 கோடி டாலராக இருந்தது. இந்த கையிருப்பு 6.1 மாதங்களுக்கு பொருள், சேவை மற்றும் இறக்குமதிக்கு நிதியளிக்க போதுமானது என்பதோடு குறுகிய கால வெளிக்கடனின் மொத்த மதிப்பில் 1.2 மடங்காகும் என்று பேங்க் நெகாரா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நாணய கையிருப்பு 10,240 கோடி டாலர்; ஐ.எம்.எப். கையிருப்பு நிலை 140 கோடி டாலர்; சிறப்பு கடன்வாங்கு சலுகை 600 கோடி டாலர்; தங்கக் கையிருப்பு 230 கோடி டாலர் மற்றும் இதர சொத்து கையிருப்புகள் 370 கோடி டாலர் ஆகியவை இந்த அனைத்துலக நிதிக் கையிருப்பு நிலையின் முக்கிய அம்சங்களாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles