யுக்ரேனில் முழுவிச்சில் போர் தொடங்கியுள்ளது
ரஷ்யாவிற்கு பன்னாட்டு சமூகம் கண்டனம்

யுக்ரேனில் முழு வீச்சிலான போரை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில் தற்போதைய கொரோனா பருவத்தில் இத்தகைய நடவடிக்கை தேவைதானா என்று கேட்டு பன்னாட்டு சமூகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
யுக்ரேனியத் தலைநகரான கிவ்-இல் வெடிகுண்டு சத்தம் தொடர்ந்து கேட்பதாக பன்னாட்டு ஊடகத் தகவல் தெரிவிக்கும் நிலையில், உலக நாடுகள் ரஷ்யாவை தடுத்து நிறுத்த வேண்டும் என யுக்ரேனிய வெளியுறவு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், யுக்ரேனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள தொடர்பு எண், மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை தமிழ் நாட்டின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ளது.
