28.5 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

பள்ளிகளுக்கு புதிய எஸ்ஓபி வழிகாட்டுதல்: -சுகாதார அமைச்சு வழங்கியது!

🔥 Views : 5
👁 Reading Now : 31

கோவிட்-19 தொற்றைச் சமாளிக்க பள்ளிகளுக்கு புதிய எஸ்ஓபி வழிகாட்டி முறையை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளதாக கல்வித் துறை துணை அமைச்சர் டத்தோ முகமது ஆலமின் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சும் மாவட்டச் சுகாதார அலுவலகங்களும் கல்வி அமைச்சகத்துடன் இணக்கமாக செயல்படுகின்றன; பள்ளியில் கோவிட்-19 தொற்று ஏற்பட்டு, அதுகுறித்தப் புகாரைப் பெற்றவுடன் தொற்று மதிப்பீட்டை மேற்கொள்கின்றனர். விடுதியில் ஏதேனும் நோய்த்தொற்று இருந்தால், தொடர்ந்து செயல்பட வேண்டுமா அல்லது விடுதியை மூட வேண்டுமா என்பதைச் சுகாதார அமைச்சகம் மதிப்பிடும்.
மொத்தத்தில் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு தொடர்பில் முழுநேர விழிப்பு நிலையில் கல்வி அமைச்சு செயல்படுகிறது என்று முகமது ஆலமின் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles