
நாட்டில் ஒருதலைப்பட்ச மதமாற்றம் தொடர்பில், தொடர்ந்து சலசலப்பு நிலவி வரும் சூழ்நிலையில், தனித்து வாழும் தாய் Loh Siew Hong-இன் மூன்று பிள்ளைகள் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்ட விவகாரம் அண்மையில் அதிகமாக பேசப்பட்டது.
இதுகுறித்து விவாதிக்கவும் ஆலோசிக்கவும் வட்டமேசைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக சமய விவகார அமைச்சர் Idris Ahmad தெரிவித்துள்ளார்.
வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் சட்ட வல்லுநர்கள், விரிவுரையாளர்கள், முஃப்திகள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொள்ள இருப்பதாகவும் Idris தெரிவித்துள்ளார்.



