
Astro நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரி Datuk Rohana Rozhan, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்பட்டார். தன்னை கட்டாயப்படுத்திய Datuk Rohana Rozhan-உக்கு, 1MDB பணத்தைக் கொண்டு லண்டனில் ஒரு கோடி டாலருக்கும் அதிக மதிப்புள்ள வீட்டை வாங்கி கொடுத்தததாக, அமெரிக்க நீதிமன்றத்தில் Goldman Sachs வங்கியின் முன்னாள் அதிகாரி Tim Leissner கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து Rohana Rozhan-ஐ மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருகின்றது. அத்துடன் அவரது சொத்துக்களையும் வங்கி கணக்கையும் அவ்வாணையம் ஏற்கெனவே முடக்கி வைத்துள்ளது.



