
லஞ்ச ஊழலை துடைத்தொழிப்பதில் அரசாங்கம் முழு கடப்பாட்டைக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசாங்கம் யாரையும் பாதுகாக்கவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ ismail Sabri Yaakob தெரிவித்தார். தவிர, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை ஒருவர்மீது சுமத்துவதில் அரசாங்கம் தேர்ந்தெடுக்கும் போக்கை கொண்டிருக்கவில்லை. அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட அதிகமான ஊழல் வழக்குகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ஊழலில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.



