24.7 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

எண்ணெய் – எரிவாயு விலையேற்றம்: -மலேசியா நன்மையடையும்

உக்ரைய்ன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்துவதைத் தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை, ஏற்றம் கண்டுள்ளது. இதனால், மலேசியா பொருளாதார நன்மையடையக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எண்ணெய் மற்றும எரிவாயு மொத்த ஏற்றுமதி நாடு என்ற முறையில் மலேசியா நன்மையடையும் என்றாலும், இந்த அணுகூலம் நீண்ட காலத்திற்கு தொடராது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டிலும் பன்னாட்டு சந்தையிலும் எண்ணெய் விலை உயர்வு கண்டிருப்பதால், பெட்ரோனாஸ் நிறுவனம் அதிக வருமானத்தைப் பெறமுடியும் என்று Asia School of Bussiness-இன் உதவிப் பேராசிரியர் Renato Lima de oliveira கருத்து தெரிவித்துள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles