24.7 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

கோவிட்-19 சுய சோதனைக் கருவி விலை: வெ.5.00 கீழே குறைக்க வேண்டும்!

மக்களின் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையாக, கோவிட்-19 சுய பரிசோதனைக் கருவி-RTK-Ag-யின் உச்சவரம்பு விலையை வெ.5.00க்கும் குறைவாக நிர்ணயம் செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றில் இருந்து விடுபடுவதை உறுதிசெய்வதற்காகத் தற்போது சுய-சோதனைக் கருவிகளைப் பயன்படுத்துவது ஒரு சமூக வழக்கமாகிவிட்டது. பள்ளிக்கூடம் மற்றும் வேலைக்குச் செல்லுமுன் சுய-சோதனைக் கருவிகளைப் பயன்படுத்துவது அன்றாட வழக்கமாக தொடர்வதால், இதன் விலை உயர்வாக இருப்பது நியாயமில்லை என்று லெம்பா பந்தாய் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபஹாமி பாட்சில் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு அணுகூலம் அளிக்கும் வகையில் இதன் விலையை வெ.5.00-க்குக் கீழ் குறைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவாதத்தின்போது, ஃபஹாமி பாட்சில் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles