
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், அரசியல் கருவியாகப் பயன்ப்டுத்தப்படுகிறதா என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார். டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தன்னுடைய பிரதமர் பதவியைத் தற்காத்துக் கொள்ள, அரசு சார்பு நிறுவனங்கள்-GLC பதவிகளை லஞ்சமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுகளை ‘இனி மேல்நடவடிக்கை இல்லை’ என்று MACC வகைப்படுத்தியுள்ள நிலையில் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களில் ஒருவரான லிம் இந்த வினாவை எழுப்பியுள்ளார். இதன் தொடர்பில் 2020 பிப்ரவரி 23 பெர்சத்து உச்சமன்றக் கூட்டத்தில் பதிவுசெய்யப்பட்டு பின்னர் வெளியான குரல்பதிவில் குற்ற நடவடிக்கை இல்லை என்று குறிப்பிட்டுள்ள MACC-இன் தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி, முகைதீன் யாசினால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
