
புத்ரா ஜெயா வைக் கைப்பற்றும் முயற்சியில் எனது லாயாங் லாயாங் சட்டமன்ற வேட்பாளர் தேர்தல் பயணம் அமைத்துள்ளது என்று டாக்டர் மஸ்லீ மாலிக் சூளுரை த்துள்ளார். இரண்டாவது முறையாக புத்ரா ஜெயா வைக் கைப்பற்றுவதற்கான கெ அடிலான் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் துணிச்சலான நடவடிக்கை ஜொகூர் மாநில த் தேர்தலில் மூலம் அதை நிருபிப்போம் என்று அவர் கூறினார். ரெங்கம் வட்டார மக்கள் எங்கள் ஆட்சியில் எல்லா திட்டங்களையும் நிறைவாகப் பெறுவார்கள். இது வெறும் வார்த்தை யில்லை. பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இருந்த காலத்தில் இவ்வட்டாரத்தில் உள்ள பல மக்கள் பிரச்சினை களுக்குத் தீர்வு காண ப் பட்டுள்ளது. அதே வேளையில் நான் கல்வி அமைச்சராக பணி யாற்றிய அந்த இனிய வேளையில் தமிழ் ப் பள்ளி மாணவர்கள் நன்னெறிக் கல்விக்கு திருக்குறள் ஒரு சிறந்த வழிகாட்டி நூலாக இருக்கும் என்று அப்போது ஆசிரியர் களிடம் பலமுறை வலியுறுத்தி யுள்ளேன். நடக்க விருக்கும் இந்த மாநிலத் தேர்தலில் என்னை வெற்றிப் பெறச் செய்தால் வட்டார மக்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சினை களுக்கு தீர்வு காண்பேன் என்று டாக்டர் மஸ்லீ நம்பிக்கை த் தெரிவித்தார்.



