
1MDB-ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான ஊழல் விவகாரத்தின் முக்கிய சூத்திரதாரி, கோல்ட்மேன் சாக்ஸ் முன்னாள் வங்கியாளர் டிம் லீஸ்னர். அதில் சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ரோஜர் எங் வெறும் கைப்பாவை என்று நேற்று புரூக்ளின் கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் அவரின் வழக்கறிஞர் மார்க் அக்னிஃபிலோ தெரிவித்தார். மலேசியாவில் கோல்ட்மேன் சாச்ஸ் முதலீட்டு வங்கியின் முன்னாள் தலைவரான 49 வயதான எங், 1MDB நிதி சம்பந்தப்பட்ட பணமோசடியில், அமெரிக்கச் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.



