25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

டத்தோஸ்ரீ அன்வாரின் படம் சிதைப்பு: -ஜோகூர் தேர்தலில் தொடரும் அவலம்

🔥 Views : 9
👁 Reading Now : 49

கட்சிக் கொடிகள் கிழிப்பு-எரிப்பு; பதாகைக்கு பாலுற்றுதல், கவர்ச்சி நடனம் என்றெல்லாம் ஜோகூர் தேர்தல் களம், அக்கப்போரான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதன் உச்சமாக இப்பொழுது, புக்கிட் பத்து தொகுதி பிகேஆர் வேட்பாளர் ஆர்தர் சியோங், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோரின் உருவங்களைக் கொண்ட பதாகை சிதைக்கப்பட்டுள்ளது. ஜொகூரில் இந்தத் தடவை காழ்ப்புணர்ச்சியுடன் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுவதாக ஆர்தர் சியோங் வருத்தம் தெரிவித்துள்ளார். இணக்கமான சூழ்நிலையில் தொடங்கிய தேர்தல் களம், தேர்தல் நாள் நெருங்க நெருங்க முரட்டுத்தனமும் முறுகல் நிலையும் கொண்டதாக மாறியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். அதேவேளை, பிகேஆர் உறுப்பினர்கள் இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்றும் தொடர்ந்து ஆரோக்கியமான, ஜனநாயக முறையில் செயல்படும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles