
சிலாங்கூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைகழகத்தில் மேற்கொண்ட சோதனையில், குடிநுழைவுத் துறையினர் , வேலைக்கான முறையான ஆவணங்களையும், அடையாள ஆவணங்களையும் வைத்திருக்காத 33 அந்நிய நாட்டவர்களைக் கைது செய்தனர்.அந்த சோதனையில் கைதான 22 -லிருந்து 67 வயதானவர்கள், அப்பல்கலைகழகத்தில் துப்புறவு பணியாளர்களாகவும், தோட்டக்காரர்களாகவும் வேலை செய்து வந்தவர்கள் என, குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஶ்ரீ கய்ரூல் சய்மீ டவுட் ( Datuk Seri Khairul Dzaimee Daud )தெரிவித்தார்.இந்தோனேசியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அந்த அந்நிய நாட்டவர்கள், சோதனையின் போது மலையேறி தப்பிக்க முயன்றதோடு, சிறு அறைகளில் ஒளிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
