
மலேசியாவிற்குள் நுழையும் பயணிகள் மைசெஜாத்ரா செயலியில் பொய்யான தகவலை இடம்பெறச் செய்தால் ,அவர்களுக்கு சிறை அல்லது தண்டம் விதிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் சுகாதாரம் குறித்து பொய்யான தகவலை வழங்குவது, 1988-ஆம் ஆண்டு தொற்றுநோய் கட்டுப்பாடு-தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றமாகும். அத்துடன் அவ்வாறு செய்யும் பயணிகள்மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியுமென கைரி மேலும் தெரிவித்தார்.
