30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

லிம் கிட் சியாங்கிற்கு மலாய்க்காரர்கள் கடன்பட்டுள்ளனர்:
-அன்வார்

🔥 Views : 8
👁 Reading Now : 37

நாட்டு மக்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மக்களுக்கு ஆற்றிய பங்கிற்காக DAPயின் பெருந்தலைவர் Lim Kit Siang கிற்கு மலாய்க்காரர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

லிம் கிட் சியாங், அரசியல் மட்டும் பேசுவதில்லை; பல மக்களின் உணர்வு, மற்றும் கண்ணோட்டங்களையும் அவர் உணர்ந்து பேசக்கூடியவர் என எதிர்க்கட்சி தலைவருமான அன்வார் கூறினார்.

சமூகத்தை பகிரங்கமாக குறைகூறும் குறிப்பிட்ட சில மலாய் தலைவர்களை ஒப்பிடும்போது லிங் கிட் சிங் வித்தியாசமானவர் என்றும் அவர் தெரிவித்தார். மலாய்க்காரர்கள் கடுமையாக வேலை செய்பவர்கள் என்பதோடு அவர்கள் சோம்பேறிகளாக இருந்ததில்லை என்று லிம் எப்போதும் கூறுவதையும் அன்வார் நினைவுகூர்ந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles