30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சட்டவிரோத நீர் இணைப்பு:
-தஞ்சோங் சிப்பாட் பன்றிப் பண்ணை உரிமையாளர்மீது நடவடிக்கை

🔥 Views : 9
👁 Reading Now : 38

சட்டவிரோதமாக குழாய் மூலம் நீர் இணைப்பை ஏற்படுத்திய கோல லங்காட், தஞ்சோங் சிப்பாட்டில் உள்ள பன்றி பண்ணைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஸ்பான் எனப்படும் தேசிய நீர் ஆணையம் கூறியது.

உயர் அழுத்தம் கொண்ட போலிஸ்திரீன் குழாயை கொண்டு அந்த இணைப்பு மேற்கொள்ளப்பட்டது என்று ஸ்பான் மற்றும் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த சோதனையில் இந்தக் கள்ளத்தனம் தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக குற்றப்பதிவு வெளியிடப்பட்டதோடு நீர் விநியோகத்தை துண்டிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது என்று ஸ்பான் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles