25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

போராட்டங்களை ஒடுக்க இலங்கையில் கடும் ஊரடங்கு

🔥 Views : 8
👁 Reading Now : 43

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த முடிவுகளே காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியாக இலங்கையில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles