30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சுக்மா 2022- அறுபது தங்கப்பதங்களை வெல்ல சிலாங்கூர் இலக்கு

🔥 Views : 8
👁 Reading Now : 32

இவ்வாண்டு செப்டம்பர் 29 முதல் ஆக்டோபர் 8 வரை நடைபெறவிருக்கும் 2022 ஆம் ஆண்டிற்கான மலேசிய விளையாட்டுப் போட்டி-சுக்மாவில் குறைந்த து 60 தங்கப்பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தைப் பிடிக்க சிலாங்கூர் இலக்கு கொண்டுள்ளது.

மாநில விளையாட்டாளர்களின் திறன் மற்றும் தொடர்ச்சியாக அவர்கள் மேற்கொண்டு வரும் பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

முன்பு, 80 பதக்கங்களை வெல்ல இலக்கு நிர்ணயித்திருந்தோம். இப்போது அந்த இலக்கை 60 ஆக ஆக்கியுள்ளோம். இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் ஒன்றை பெறுவதை உறுதி செய்யும்படி சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தை (எம்.எஸ்.என்.) கேட்டுக் கொண்டுள்ளதாகவும் முகமது கைருடின் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles