
நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகள் சிலவற்றில் வாகனங்கள் மெதுவாக நகர்வதைக் காண முடிந்தது. ரமலான் மாத தொடக்கத்தை முன்னிட்டு மாநகர்வாசிகள் வார இறுதி விடுமுறையைப் பயன்படுத்தி சொந்த ஊர்களுக்குச் செல்லும் காரணத்தினால் நெடுஞ்சாலைகளில் வாகன எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் பேச்சாளர் கூறினார்.
கிழக்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் கோம்பாக் டோல் சாவடிக்கு முன் 500 மீட்டர் வரை நெரிசல் காணப்படுவதோடு சுங்கை பீசி டோல் சாவடியில் மாநகர் நோக்கிச் செல்லும் தடத்திலும் இந்நிலை நிலவுகிறது என அவர் சொன்னார்.
