30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

இலங்கை நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்: -அவசர நிலை பிரகடனம் மீட்பு

🔥 Views : 7
👁 Reading Now : 24

பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் அவரின் சகோதரரும், அதிபருமான கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கையில் நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே திரண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இலங்கை அரசு அனைத்தையும் சீனாவுக்கு விற்று விட்டதாகவும், இதுதான் பொருளாதார பிரச்சினைக்கு காரணம் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எனவே அதிபரும், பிரதமரும் பதவி விலகி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் போராட்டக்காரரகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி தேதி முதல் நடைமுறையில் இருந்து வரும் அவசர நிலை வாபஸ் பெறப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். நள்ளிரவு முதல் அவசர நிலை சட்டம் திரும்பப் பெறப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles