30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

பூனையை சுட்டுக்கொன்ற முன்னாள் போலீஸ்காரருக்கு வெ.6,500 தண்டம்

🔥 Views : 6
👁 Reading Now : 58

ஆசையோடு வளர்த்த கோழிக்குஞ்சை பூனை கடித்து உண்டதை தாங்க முடியாமல் அதனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது மற்றும் பொது இடத்தில் துப்பாக்கி பிரயோகம் நடத்தியது என இரு குற்றங்களுக்காக முன்னாள் போலீஸ்காரர் ஒருவருக்கு செலயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வெ.6,500 தண்டம் விதித்தது.

தம்மீதான குற்றச்சாட்டை 65 வயதுடைய Zainol Abidin Md Zain ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து 5,000 ரிங்கிட் அபராதமூம் அதனை செலுத்தத் தவறினால் ஆறு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

மேலும் பொது இடத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்ததற்காக 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை செலுத்தத் தவறினால் இரண்டு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்கும்படியும் Zainol Abidin னுக்கு பணிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles