25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

கெந்திங் தங்கும் விடுதியில் ஆடவர் நிர்வாணக் கோலம்

வேலையிட மன அழுத்தத்தால், நிதானத்தை இழந்ததாகக் கருதப்படும் ஆடவர், நேற்று கெந்திங் மலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பலரது முன்னிலையில் நிர்வாணமாக தோன்றினார்.

அந்த ஆடவர், அந்த சுற்றுலா தலத்திற்கு தனது மனைவி, 2, 5 வயதுடைய தனது இரு பிள்ளைகளுடன் விடுமுறையைக் கழிக்க வந்திருந்ததாக கூறப்படுகிறது

அவ்வேளையில் அந்த சம்பவம் தொடர்பில் பகிரப்பட்டிருக்கும் 15 வினாடி காணொளியில் அந்த ஆடவர், தனது மனைவி , பிள்ளைகளின் முன்னிலையில் ஆடைகளைக் கழற்றி , கீழே உட்கார்ந்து தலை குனிவதைக் காண முடிகிறது.

இதனிடையே, அந்த ஆடவர் கெந்திங் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் , பெந்தோங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக , பெந்தோங் மாவட்ட போலிஸ் தலைவர் Zaiham Mohd. Kahar தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles