
சிலாங்கூர் மாநில முழுவதும் 56 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனையில் பங்கு கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நோய்த் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் நோயிலிருந்து முற்றாக விடுபடுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள இந்த வாய்ப்பினை பொது மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக நோய்த் தொற்றுக்கான அறிகுறியை எதனையும் கொண்ராதவர்களும் இந்த சோதனையில் பங்கேற்பது அவசியமாகும் என்றார் அவர்.
