
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அதி நவீன விமானம் ஒன்று மலேசிய வான்வெளியில் வட்டமடித்த பின்னர் சிங்கப்பூரில் தரையிறங்கி இருக்கிறது.
பயிற்சிக்காக இந்த விமானம் புத்ராஜெயா வான்வெளி பகுதியை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த விமானம் மலேசியாவில் வட்டமடித்த பின்னர் சிங்கப்பூரில் தரை இறங்கி இருப்பது தொடர்பில் பல கேள்விகளும் எழுந்துள்ளன.
முதலில் இது ஒரு சாதாரண விமானம் இன்று கணிக்கப்பட்டது. பின்னர்தான் அது அதிநவீன இஸ்ரேல் விமானம் என்பது தெரியவந்திருப்பதாக தற்காப்பு துறை ஆய்வாளர் ஷாக்கி சாலே தெரிவித்தார்.
இந்த விமானம் வருகை பொதுமக்கள் மத்தியிலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
