
பிகேஆர் கட்சித் தேர்தல் தற்பொழுது தேசிய அளவில் பேசுபொருளாகி உள்ள நிலையில் அதன் முன்னாள் உதவித் தலைவரும் பெர்மாத்தாங் பாவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான நூருள் இஸா, கட்சித் தேர்தலில் பங்கு பெறாமல் ஒதுங்கி இருப்பது பலரின் புருவங்களை உயர்த்தி உள்ளது.
பிகேஆர் கட்சியின் அடுத்த தேசியத் தலைவர் என்று கருதப்படுபவரும் நாட்டின் முதல் பெண் பிரதமர் என்று மலேசிய அரசியல் வட்டத்தில் எதிர்பார்க்கப்படுபவருமான, நூருள், 2018 கட்சித் தேர்தலின்போது மிக அதிக வாக்குகளில் வெற்றிபெற்று உதவித் தலைவரானார்.
இருந்தாலும், அந்தப் பதவியைவிட்டு விலகிய அவர், தொகுதி மக்களின் நலம், தேசிய பொது அரசியலில் ஆகிய இரண்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
