
கடந்தாண்டு ஜூலையில், ஈப்போ திடலில் ஹெலிகப்டரில் இறங்கி, nasi ganja உணவு வாங்கி செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை போலீஸ் நிறுத்தவில்லை. அதன் தொடர்பான விசாரணை அறிக்கை முழுமைப் பெற்று மேல் நடவடிக்கைக்காக தேசிய சட்டத் துறை அலுவலகத்திடம் ஒப்படைத்ததாக, பேராக் போலீஸ் தலைவர் Datuk Mior Faridala தெரிவித்தார்.
எனினும், மேலும் சில விபரங்கள் தேவைப்படுவதாக கூறி அந்த அறிக்கையை சட்டத்துறை திரும்ப ஒப்படைத்திருந்தது. பின்னர் அந்த விபரங்களும் இணைக்கப்பட்டு முழு அறிக்கை மீண்டும் தேசிய சட்டத் துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக Datuk Mior Faridala கூறினார்.
