25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

இரசாயனக் கலவையை முகர்ந்த 61 மாணவர்கள்:
-மயங்கி விழுந்தனர்

ஆயர் ஈத்தாம் நூருல் இஸ்லாம் சமய இடைநிலைப்பள்ளி மாணவர்கள் கீழே கொட்டிய ரசாயனத்தை சுவாசித்ததைத் தொடர்ந்து உடனடியாக ஜித்ரா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

அந்தப் பள்ளியின் பரிசோதனைக் கூடத்தில் கந்தக அமிலம் கீழேக் கொட்டியதை தொடர்ந்து அதனை 14 முதல் 17 வயதுடைய மாணவர்கள் சுவாசித்ததாக நம்பப்படுகிறது.

காலை 10.30 மணியளவில் காலாவதியான அந்த ரசாயனத் திரவம் கீழேக் கொட்டியதை குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைவர் Rodzi Abu Hassan உறுதிப்படுத்தினார். பள்ளியின் அறிவியல் பாடத்திற்காக வைக்கப்பட்டிருந்த அந்த ரசாயன திரவம் காலாவதியாகிவிட்டது. Asid Sulfurik ரசாயனத்தை கொண்ட கலனை அந்த நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் தூக்கிச் சென்றபோது அந்த ரசாயனம் தவறுதலாக கீழேக் கொட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles