
போரின் தாக்கத்தில் இருந்து ஈழத் தமிழ் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இந்த வேலையில், ஈழ மண்ணில் கலை உலகும் புதுவடிவில் மலர்ந்து வருகிறது.
புதுமை இளம் இயக்குநர் ராஜ் சிவராஜ் தயாரிப்பில் உருவான புத்திகெட்ட மனிதரெல்லாம என்ற திரைப்படத்திற்கு கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் ரசிகர்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது; ஸ்காபுறோவில் அமைந்துள்ள ‘நெற்வின்’ கலையரங்கில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
கனடாவில் தமிழர்கள் நிறைந்து வாழும் மொன்றியால், மிசிசாகா, பிரம்ரன் உள்ளிட்ட நகரங்களிலும் இப்படத்தை திரையிடும்படி அங்குள்ள ரசிகர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளதைக் கண்டு இயக்குநர் ராஜ் சிவராஜ் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.


