
நம்பிக்கைக் கூட்டணியின்மீது தேசிய அளவில் அவநம்பிக்கை எழுந்திருப்பது உண்மைதான் என்றாலும், அதற்காக புத்ராஜெயாவை நம்பிக்கைக் கூட்டணி மீண்டும் கைப்பற்ற 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை என்று ஜசெக பொதுச் செயலாளார் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
15-ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெல்வது எளிதல்ல என்று நம்பிக்கைக் கூட்டணியில்கூட ஒரு சில தலைவர்கள் சொல்வதை தான் ஏற்கவில்லை என்று பத்துமலையில் கட்சித் தொண்டர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களிடையே உறையாற்றியபோது பேசிய அந்தோனி,
15-வது பொதுத் தேர்தலில் நாம் நம்பிக்கையுடன் களம் இறங்கினால் எதுவும் சாத்தியம் என்று சொன்னார்.
