33.9 C
Kuala Lumpur
Tuesday, August 4, 2026

Vetri

பெருநாள் காலத்தில் பெருலாபம் சம்பாதிக்க
விமான பயண நிறுவனங்கள் முயற்சி

🔥 Views : 18
👁 Reading Now : 68

கொரோனா சிக்கலால் வேலை பாதிப்பிற்கும் வருமான இழப்பிற்கும் ஆளான மக்கள், இன்னும் அதிலிருந்து மீளாத நிலையில், தற்போதைய நோன்பு பெருநாள் விடுமுறைக்காக பயணம் மேற்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதைப் பயன்படுத்தி, விமான பயண நிறுவனங்கள் பயணக் கட்டத்தை தாறுமாறாக உயர்த்தி அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கக்கூடாதென்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, சபா சரவாக் மாநிலங்களுக்கான பயணக் கட்டணம் 500% அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பாதாக ஊடகத் தகவல் தெரிவிப்பது வருத்தத்திற்கு உரியது என்றார்.

கிழக்கு மலேசியாவிற்குச் செல்லும் தீபகற்ப மலேசியர்களுக்கு வேறு வழியில்லை என்பதைத் தெரிந்துகொண்டு இப்படி செயல்படும் விமான பயண நிறுவனங்கள் குறித்து 2011 விலைக்கட்டுப்பாடு மற்றும் கொல்லை லாப சட்டத்தின்படி விசாரணை மேற்கொள்ளும்படி உள்நாட்டு வாணிகம்-பயனீட்டாளர் நலத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கியைக் கேட்டுக் கொண்டிருப்பதாக இஸ்மாயில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles