33.1 C
Kuala Lumpur
Tuesday, August 4, 2026

Vetri

நஜீப் – அன்வார் விவாதம்:
மே 12-இல் நடைபெற உள்ளது

🔥 Views : 22
👁 Reading Now : 30

Sapura Energy Berhad விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கும் முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்குமிடையிலான விவாதம் மே 12-ஆம் நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனையும் தண்டமும் விதிக்கப்பட்டு பிணையில் இருந்தாலும் நஜீப் அதிரடியாகப் பேசி வருபவர். அந்த வகையில், Sapura தொடர்பாக ரஃபிசிதான் முதலில் கருத்து தெரிவித்தார். அவருக்கு பதில் சொல்ல முற்பட்ட நஜீப், அந்த அளவில் நிறுத்திக் கொள்ளாமல் அன்வாரையும் அழைத்து வரும்படியும் அவருடனும் இதுபற்றி விவாதிக்கத் தயார் என்றும் தேவையில்லாமல் சொல்லிவிட்டார்.

அன்வார் இதை உடனடியாக ஏற்றுக் கொண்ட நிலையில் நஜீப் ஏதோதோ சொல்லி பின்வாங்கி வந்தது அவருக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்பட்ட நிலையில், இந்த விவாதம் அடுத்த மாதம் 12-ஆம் நாள் காலை 9:00 மணி அளவில் மலாயாப் பல்கலைக்கழகம் Tunku Canselor மண்டபத்தில் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles