
நோன்புப் பெருநாள் விடுமுறைக்கு நகர்புறங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப இருப்பதைத் தொடர்ந்து, கோவிட்-19 பெருந்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெருநாள் கொண்டாட்டத்தின்போது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இடையிலான சந்திப்பின் காரணமாகவும் இந்நோய்த்தொற்று பரவும் அபாயம் இருக்கிறது.


