25 C
Kuala Lumpur
Friday, September 25, 2026

Vetri

தாமான் ஸ்ரீ வாங்கியில் வடிகால் அடைப்பு
செந்தோசா மக்கள் பிரதிநிதி டாக்டர் குணராஜ் நடவடிக்கை

🔥 Views : 35
👁 Reading Now : 20

ஸ்ரீ வாங்கி குடியிருப்புப் பகுதியில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதால், மக்கள் சிரமப் படுவதை அறிந்து அங்கு சென்ற செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

அந்தக் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் வடிகால் சிறிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், அவற்றில் குப்பை தேங்கி இருக்கிறது. அத்துடன் பிரதான வடிகாலில் முறையான பராமரிப்பு இன்மையால் புற்கள் முளைத்து புதர் மண்டிக் கிடப்பதால் நிரோட்டத்தை அடைத்துக் கொண்டுள்ளது என்பதை அறிந்து, ஷா ஆலம் டத்தோ பண்டாரும் ஷா ஆலம் நகராண்மைக் கழக பொயிறியியல் பிரிவும் Seri Wangi குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள கால்வாய்களில் துப்புரவுப் பணியை உடனே மேற்கொள்ளுமாறு குணராஜ் கேட்டுக்கொண்டார்.

வடிகால் முழுவதும் அடைத்துக் கொண்டிருப்பதால், ஒரு மணி நேரம் மழை பெய்தால்கூட நீர் தேங்கி வீடுகளில் வெள்ள நீர் புகுவதாக, அங்கு வசிக்கும் மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

அத்துடன், Taman Sentosa Perdana-வில் துப்புறவுப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரின் சேவை எப்படி இருக்கிறது என்பதை, அந்தப் பகுதியின் குடியிருப்பாளர் சங்கப் பொறுப்பாளர்களைச் சந்தித்து, அங்கு இடம்பெறும் தூய்மைப் பணி குறித்து நேரில் கேட்டறிந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles