
சிங்கப்பூர் பொது தடகளப் போட்டி நடைபெற்றது. இதில், நாட்டின் நெடுந்தூர ஓட்டப் பந்தய வீரரான பிரபுதாஸ் கிருஷ்ணண் 1,500 மீட்டர் தூர ஓட்டப் பந்தய பிரிவில் தங்கம் வென்றார்.
அத்தூரத்தை அவர் 3 நிமிடம் 54.23 வினாடிகளில் கடந்து முதல் வீரராக எல்லை கோட்டை அடைந்ததோடு, அப்பிரிவில் சொந்த சாதனை நேரத்தையும் 32 வயதான பிரபுதாஸ் பதிவு செய்திருக்கிறார்.
