25.6 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

புரிந்துணர்வு ஒப்பந்தம்: பக்கத்தானுக்கும் இஸ்மாயில் அரசுக்கும் இடையிலானது; அம்னோவுடன் அல்ல

🔥 Views : 51
👁 Reading Now : 49

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், நம்பிக்கைக் கூட்டணிக்கும் இஸ்மாயில் தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில்தானேத் தவிர அம்னோவுடன் அல்ல என்று எதிரணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அம்னோவுக்கு எதிராக சீற்றம் தெரிவித்துள்ளார்.

நாடு தற்பொழுது எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அரசியல் நிலைத்தன்மையைக் கருதி இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நம்பிக்கைக் கூட்டணி உண்மையாக நிலைநிறுத்துவதுடன் இதை மேலும் நீட்டிப்பது குறித்தும் பேசுவதற்கு திறந்த மனதுடன் இருக்கிறது.

ஆனால், நாடாளுமன்றத்தில் வெறும் 40 உறுப்பினர்களை மட்டும் கொண்டிருக்கும் அம்னோ, தான்தான் அரசாங்கம் என்பதைப் போல பேசவும் செயல்படவும் கூடாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles