31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

போதைப் பொருள் பயனீடு:
-பேராக் சட்டமன்ற உறுப்பினர்மீது குற்றச்சாட்டு

🔥 Views : 5
👁 Reading Now : 61

பேராக் சட்டமன்றத்திற்கு பாசிர் பெண்டாமார் தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி டெரென்ஸ் நாயுடு, போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக இன்று குற்றம் சாட்டப்பட்டது.

53 வயதான நாயுடு, இவ்வாண்டு ஜனவரி 14, பகல் 12 மணி அளவில் செபராங் பிறை மத்திய காவல் தலைமையகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக புக்கிட் மெர்தாஜம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மெத்தாம்பெத்தாமின் போதைப் பொருளை பயன்படுத்தியதாக, 1952 பயங்கர போதைப் பொருள் சட்டத்தின்படி நாயுடு குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவருக்காக ஜசெக எம்பி ராம் கர்ப்பால் சிங் முன்னிலையான நிலையில், நீதிபதி நூருள் ரஷிடா முன்னிலையில் டெரென்ஸ் நாயுடு குற்றத்தை மறுத்தார். பின்னர் 5 ஆயிர வெள்ளியில் பிணை வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles