32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

போதுமான உணவுப் பொருள் கையிருப்பு:
-சிலாங்கூர் அரசு உறுதி

🔥 Views : 3
👁 Reading Now : 20

விரைவில் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாள் தொடர்பில் போதுமான அளவு அத்தியாவசிய உணவுப் பொருள் கையிருப்பு உள்ளதாக சிலாங்கூர் அரசு தெரிவித்துள்ளது.

யாரும் தேவைக்கு அதிகமான பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்று பயனீட்டாளர் நலப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஷா ஆலம் அரங்கில் உள்ள ரமலான் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் பந்தாவ் நடவடிக்கையைப் பார்வையிட்ட பின், மாநிலத்தில் போதுமான அளவு உணவுப் பொருள் கையிருப்பு உள்ளதோடு பற்றாக்குறை தொடர்பில் வணிகர், பயனீட்டாளர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்றும் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles