25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

ரொஹிங்கிய அகதிகள் விவகாரம்:
மலேசிய அரசுக்கு சிக்கல்

மலேசியாவில் அதிக அளவில் தஞ்சம் அடைந்துள்ள ரொஹிங்கிய மக்களை திரும்ப அழைத்துக் கொள்ளும்படி மியன்மார் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டும் அதுகுறித்து மியன்மார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்தான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை பன்னாட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும்படி மியன்மார் ரொஹிங்கிய அகதிகள் மனித உரிமை அமைப்பின் பொறுப்பாளர் Zafar Ahmad Abdul Ghani தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட தடுப்பு முகாம் மிகவும் நெரிசலாக இருக்கிறது என்றும் இது மனித உரிமைக்கு பொருத்தமில்லை என்றும் மலேசிய அரசுசார அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஆனால், ரொஹிங்கிய அகதிகள் தப்பி ஓடுவதற்கும்முதல் நாள் இரவில் அவர்களுக்குள் நிகழ்ந்த கலவரத்தில் ஒருவர் மரணம் அடைந்ததுதான் இதற்கு காரணம் என்று கெடா மாநில போலீஸ் தலைவர் Wan Hassan Wan Ahmad தெரிவித்திருக்கிறார்.

மொத்தத்தில், ரொஹிங்கிய அகதிகள் விவகாரம், மலேசிய அரசுக்கு சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles