25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

10 வயது சிறுமி பட்டினியுடன் சித்ரவதை;
3 வயது குழந்தை அடித்துக் கொலை

10 வயது சிறுமி வளர்ப்புத் தாயால் பட்டினி போடப்பட்டு, உடல் முழுவதும் தாக்கப்பட்ட கொடுமையை அறிந்து சமூக நலத்துறை அதிகாரிகளும் போலீசாரும் அச்சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சிகாமாட்டில் வசிக்கும் சம்பந்தப்பட்ட இந்தோனேசியத் தாய் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிரம்பான்காவல்துறை தலைமை அதிகாரி Nanda Maarof தெரிவித்துள்ளார் .

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியின் முகத்திலும் காதிலும் கடுமையாக காயம் இருப்பதுடன் கையிலும் காலிலும் திருகிய காயங்கள், முதுகில் கழியால் அடித்த காயம் என உடல் முழுதும் காயமும் தழும்பும் இருப்பதாக நெகிரி செம்பிலான மாநில சமூக நலத்துறை இயக்குநர் Rosnah Sardi தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கெடாவில் 3 வயது குழந்தை தாய்-வளர்ப்புத் தந்தை மராமரிப்பில் இருந்தபொழுது வதைபட்டு இறந்துள்ளது. இது, கொலை வழக்கின்கீழ விசாரிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles