
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதிக்கு மருத்துவ சேவை மறுக்கப்பட்டதாக வெளியான தகவலை போலீஸ் தரப்பு மறுத்துள்ளது.
தானியங்கி பண பரிவர்த்தனைக்கான ‘ஏடிஎம்’ அட்டைகளை வாங்குவது-விற்பனை செய்வது தொடர்பில் ஏப்ரல் 17-இல் போலீஸ் தடுப்புக் காவல் சட்டவிதி 117-இன்படி கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், செலாயாங் காவல் நிலையத்தில் இருந்தபோது, தனக்கு காய்ச்சல் இருப்பதாகவும் டிங்கிக் காய்ச்சல் அல்லது கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் சொன்னதன் அடிப்படையில் அவர் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார் என்று சிலாங்கூர் மாநில வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் தலைவர் Azman Ali சொன்னார்.
