
Macau மோசடி குறித்து அறியாத, தெரியாத மலேசியர் இல்லை என்னும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் மோசடிக் கும்பல் செயல்படுகிறது. ஒருவரின் வங்கி சேமிப்பு, குடும்ப சூழல், வயது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு புதுப்புது பாணியில் ஏமாற்றுகின்றனர்.
இதில், பலதரப்பட்ட பொதுமக்களும் ஏமாந்து இலட்சக் கணக்கில் பறிகொடுத்தபின் போலீசை நாடும் சம்பவம் தினமும் தொடர்கிறது. இந்த ஆண்டில் மட்டும் ஏப்ரல் 19-ஆம் நாள் வரை Macau மோசடி தொடர்பில் 1,585 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பொதுமக்கள் வெ.65.4 மில்லியனை இழந்துள்ளனர்.
போலீஸ் எவரையும் தொலைபேசியில் விசாரிக்காது; ஒன்று காவல்துறையினர் நேரில் வருவார்கள் அல்லது காவல்நிலையத்துக்கு அழைப்பார்கள். போலீஸ் தவிர, வேறு யார் அழைத்தாலும் கடிதம் அனுப்பச் சொல்லுங்கள் அல்லது நேரில் வரச் சொல்லுங்கள். அதேவேளை முகவரி, அடையாள அட்டை எண் உள்ளிட்ட எந்த விவரத்தையும் கொடுக்காமல் சம்பந்தப்பட்டவர்களை நேரில் வரச் சொல்லுங்கள் என்று பொதுமக்களை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதில் ஒன்றுமட்டும் தெரியவில்லை; வங்கி சேமிப்பில் அதிகமான பணத்தைக் கொண்டிருப்பவர்களைப் பற்றி இந்த மோசடிக் கும்பல் எப்படி தெரிந்துகொள்கிறது என்பதுதான் அது.
