
போதைப் பொருள் வினியோகிக்கும் கும்பலைச் சேர்ந்த அறுவரை கைது செய்த போலீசார் குறைந்தது 10 லட்சம் வெள்ளி மதிப்புடைய போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.
செபெராங் பிறை போதைப் பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் குற்றவியல் விசாரணைத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 22 முதல் 55 வயதுடைய அந்த ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் அடங்குவார் என பினாங்கு போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ Muhamad Shuhaily Mohd zain தெரிவித்தார்.
