33.1 C
Kuala Lumpur
Tuesday, August 4, 2026

Vetri

நாகேந்திரன் மரண தண்டனை:
-சிங்கப்பூர் தற்காக்கிறது

🔥 Views : 18
👁 Reading Now : 58

சிந்திக்கும் திறன் குறைபாடு உள்ள நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக அனைத்துலக நிலையில் கவலையும் குறைகூறல்களும் எழுந்த போதிலும் அந்த முடிவை சிங்கப்பூர் அரசாங்கம் தற்காத்துள்ளது.

2009ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குள் 43 கிரேம் ஹெரோயின் கடத்தியதில் அவர் குற்றம் புரிந்துள்ளார் என்பதால் அவருக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக நாகேந்திரன் செய்திருந்த பல்வேறு மேல் முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தாம் என்ன செய்கிறோம் என்பது நாகேந்திரனுக்கு தெரியும் என்பதோடு சிந்திக்கும் திறன் குறைபாட்டை அவர் எதிர்நோக்கவில்லை என்று சிங்கப்பூர் மத்திய போதைப் பொருள் துடைத்தொழிப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles