25.3 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்
63-ஆவது ஆண்டை எட்டுகிறது

நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் சிக்கலால் பாதிக்கப்பட்ட தோட்டப் பாட்டாளிகளை அரவணைக்கவும் மலேசிய இந்திய சமுதாயத்தில் கூட்டுறவு மனப்பான்மையைத் தோற்றுவிக்கவும் உருவான தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 1960-ஆம் ஆண்டில் இதே மே 14-இல் தோற்றுவிக்கப்பட்டது.

lfc

மஇகா-வின் அன்றையத் தலைவர் துன் வீ. திருஞான சம்பந்தன் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டுறவு சங்கத்தை தொடர்ந்து வழிநடத்த அதே சம்பந்தனால் அடையாளம் காணப்பட்டவர் டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் அவர்கள்.

தோட்டப் பாட்டாளின் நலத்துடன் பொதுவாக இந்திய சமூகத்தின் கல்வி-மொழி-கலை மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாடாற்றிவரும் கூட்டுறவு சங்கம், நாட்டில் முன்மாதிரி கூட்டுறவு அமைப்பு என்று டான்ஸ்ரீ க.குமரன் குறிப்பிடுவது சாலப் பொருந்தும்.

கூட்டுறவு சங்கமும் அதன் தலைமையும் வாழ்க!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles