31 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

பிகேஆர் கட்சித் தேர்தல்: கோத்தா ராஜா தொகுதியில் என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்!

🔥 Views : 23
👁 Reading Now : 65

கோத்தா ராஜா தொகுதி வட்டாரத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். அதைப்போல செந்தோசா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கும் சமூகக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அயராமல் தொண்டாற்றி வருகிறேன் என்பதை மக்கள் அறிவார்கள்.

குழந்தைகளுக்கான பாலர் கல்வி முதல் மூத்த குடிமக்களுக்கான சமூக நலத் திட்டம், பொது சுகாதாரம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வெள்ளச் சிக்கல் ஏற்படாதவாறு கால்வாய்-வடிகால் துப்புறவுப் பணி, இளைஞர்களுக்கு ஆதரவு, தொழில்முனைவோருக்கு தொடக்க உதவி, பி-40 குடும்பங்களுக்கு தொடர் சமூக நலத் திட்டம் என்றெல்லாம் அடுத்தடுத்து செந்தோசா மக்கள் சேவை மையத்தின் சார்பில் மக்கள் நலப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின், மாநில அளவில் என் சேவை விரிந்துள்ளது. இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டு, கோத்தா ராஜா தொகுதி பிகேஆர் அன்பர்களும் தொண்டர்களும் தன்னை ஆதரித்து கோத்தா ராஜா தொகுதித் தலைவராக இந்தத் தேர்தலில் வெற்றிபெறச் செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles