
அண்மைய ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலின்போது, முதல் முறையாக வாக்களிக்கச் சென்றவரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தடுத்ததன் தொடர்பில் ஸ்கூடாயைச் சேர்ந்த அந்த வாக்காளர் நேற்று வழக்கு தொடர்ந்தார்.
இதன் தொடர்பில் தேர்தல் மறுசீரமைப்பு இயக்கமான ‘பெர்சே’-வின் செயல்பாட்டாளர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு உதவி செய்தனர்.
வாக்களிப்பு தினமான மார்ச் 12-ஆம் நாளில் சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு கோவிட்-19 பாதிப்பு இல்லையென்பதைத் தெரிவித்த பின்னும் அந்த வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.
