28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சிலாங்கூர் மந்திரி பெசார் வேட்பாளரை
தேசிய முன்னணி அறிவிக்க வேண்டும்

🔥 Views : 8
👁 Reading Now : 24

15-ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி கைப்பற்ற வேண்டும் என்றால், மந்திரி பெசார் வேட்பாளரை முன்னரே அறிவிக்க வேண்டும். இல்லை யென்றால், நம்பிக்கைக் கூட்டணியை எதிர்கொள்வது சிரமம் என்று சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ கிர் தோயோ தெரிவித்துள்ளார்.

12-ஆவது பொதுத் தேர்தலின்போது எழுந்த ஹிண்ட்ராஃப் எழுச்சியால் சிலாங்கூர் மாநில ஆட்சியை அப்போதைய மக்கள் கூட்டணியிடம் தேசிய முன்னணி இழந்தது. அந்தத் தேர்தலில் 20 தொகுதிகளை மட்டுமே தே.மு. வென்றது.

2013, 13-ஆவது பொதுத் தேர்தலில் மேலும் 8 இடங்களை இழந்து, 12 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே வெற்றிகொண்டது. கடந்த 2018 பொதுத் தேர்தலில் 4 இடங்களிம் மட்டும் தேசிய முன்னணி வென்றது. எனவே, வரும் பொதுத் தேர்தலிலும் மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்காமல் களம் இறங்கினால், அது தேசிய முன்னணிக்கு பாதகமாகவே முடியும் என்று கிர் தோயோ தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles