28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

உடனடி பொதுத் தேர்தலுக்கு அம்னோவிலேயே
ஒருமித்த கருத்து இல்லை:

🔥 Views : 6
👁 Reading Now : 45

தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் இன்னும் ஓராண்டு இருக்கும்பொழுது, அதைக் களைத்துவிட்டு உடனே 15-ஆவது பொதுத் தேர்தலை நடத்தாவிட்டால், அது எதிர்க்கட்சிக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்று கூறியுள்ளாஅம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியை நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் பொறிந்து தள்ளியுள்ளனர்.

15-ஆவது பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தை அமனோவிலேயே ஏற்படுத்த முடியாத ஜாஹிட் ஹமிடியன் வாய்ப் பந்தலுக்கு பஞ்சமில்லை என்று ஜசெக தலைவர் லிம் குவான் எங்கும் அமானா மத்திய செயலவை உறுப்பிர் Faiz Fadzil-உம் தெரிவித்துள்ளனர்.

கொல்லைப்புற ஆட்சியின் இரண்டாவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள அம்னோ அமைச்சர் ஒருவர்கூட உடனடி தேர்தல் குறித்து வாய்த் திறக்கவில்லை. தவிர, நாட்டில் இப்பொழுது நிலவும் நிலையற்றத் தன்மைக்கும் ரிங்கிட்டின் சரிவுக்கும் அம்னோதான் காரணம் என்றும் அவர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles