28 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி
இங்கிலாந்தில் ஜூலை-ஆகஸ்டில் நடைபெறுகிறது

🔥 Views : 7
👁 Reading Now : 56

காமன்வெல்த் அமைப்பு என்னும் பொதுநலவாய உறுப்பு நாடுகளுக்கு இடையே நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுகள் இந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இடம்பெறுகிறது.

இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் 72 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் தடகளம், பூப்பந்து, ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெறுகின்றன.

ஏறக்குறைய 6,500 வீரர்கள் மற்றும் குழு நிர்வாகிகள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில், முதல்முறையாக பெண்கள் கிரிக்கெட் போட்டியும் இடம்பெறவுள்ளது.

2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி, பிரிட்டனின் பர்மிங்காம் நகர், அலெக்சாண்டர் அரங்கில் ஜூலை 28 முதல் முதல் ஆகஸ்டு 8ஆம் நாள்வரை நடைபெறவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles