
நாட்டில் குறைந்த மாணவர்களைக் கொண்ட 28க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி இன்று AST செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார்.
இந்த 28 பள்ளிகளும் பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த பள்ளிகள் தோட்டப் புற பள்ளிகள் ஆகும்.
இந்தப் பள்ளிகளின் லைசன்ஸ் கொண்டு இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் புதிய பள்ளிகளை கட்ட வேண்டும்.
இதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாட்டில் இந்த 28 தமிழ்ப்பள்ளிகளை நாம் நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று அவர் சொன்னார்.
ஒரு சீன பள்ளி மூடப்படும் அபாயம் இருந்தால் அந்தப் பள்ளி லைசென்சை கொண்டு வேறு இடத்தில் பிரமாண்டமாக கட்டுகிறார்கள்.
அந்த அடிப்படையில் இந்த 28 தமிழ்ப்பள்ளிகளின் லைசென்ஸ் கொண்டு மக்கள் அதிகம் வாழும் இடங்களில் புதிய தமிழ்ப் பள்ளிகள் கட்ட வேண்டும்.
நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் எண்ணிக்கை எந்த வகையிலும் குறையக்கூடாது. ஆகவே நடப்பு அரசாங்கத்தில் உள்ளவர்கள் இதற்கான அடிப்படை வேலைகளை செய்ய வேண்டும்.
இதற்கு பினாங்கு மாநில அரசாங்கமும் முழு ஆதரவை வழங்கும் என்று டாக்டர் ராமசாமி தனது பேட்டியில் குறிப்பிட்டார்
